சித்தாந்த வேறுபாடுகள் உள்ள சூழலில் வாழ கற்றுக்கொள்ளுங்கள், நெருப்பை எரியவிடாதீர்கள் என முதலமைச்சரின் ட்வீட்டிற்கு அண்ணாமலை கருத்து.
தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்:
unknown nodeடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் சத்ரபதி சிவாஜி பிறந்தாநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, ஏபிவிபி பிரிவு மாணவர்கள் மற்றும் இடதுசாரி மாணவர்கள் ஒரே இடத்தில் கூடியதால் அங்கு மாணவர்களிடையே தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதில், இடதுசாரி மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு மாணவர்கள் மீது ABVP அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்:
சத்ரபதி சிவாஜியின் புகைப்படம் தரையில் வைக்கப்பட்டிருந்ததாக கூறி ஏபிவிபி அமைப்பினர் தமிழ்நாட்டு மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தமிழக மாணவர்கள் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவரது பதிவில், டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
unknown nodeதமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என்றும், ஏபிவிபி மாணவர்கள் பெரியார், கார்ல்மாக்ஸ் புகைப்படங்களை சேதப்படுத்தியது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்திருந்தார். இதுபோன்று, டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். தந்தை பெரியார், அம்பேத்கர் உருவப்படங்களை சேதப்படுத்திய ஏபிவிபி அமைப்பினரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏபிவிபி மற்றும் எஸ்எப்ஐ மோதல் குறித்து விளக்கம்:
unknown nodeஇந்த நிலையில், டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நடந்த ஏபிவிபி மற்றும் எஸ்எப்ஐ மோதல் குறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அவரது பதிவில், மாநில முதலமைச்சராக இருந்து கொண்டு முழு தகவலையும் அறியாமல் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் அளித்த தகவலைக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்திருப்பது வருத்தமளிக்கிறது. இந்த மெத்தனப் போக்கை, நம் மாநில மக்கள் பொறுத்துக் கொள்வதும் வருந்தத்தக்கது. நேற்று, டெல்லி ஜேஎன்யூவில் உள்ள மாணவர் செயல்பாடு மையத்தில், சத்ரபதி சிவாஜி மகாராஜை மாலை 6:30 மணிக்கு கௌரவிக்கும் நிகழ்ச்சியை ஏபிவிபி நடத்த திட்டமிட்டது.
உருவப்படங்கள் சேதம்:
unknown nodeஇருப்பினும், SFI இன் நிகழ்வு திட்டமிடப்பட்ட முன்பதிவை விட இழுத்தடிக்கப்பட்டதால் ABVP இன் நிகழ்வு இரவு 7:30 மணிக்கு மட்டுமே தொடங்கியது. ஏபிவிபியின் மாணவர்கள் இரவு 8:30 மணிக்கு ஓய்வு எடுத்துக்கொண்டு இரவு உணவிற்கு வெளியே சென்றிருந்தபோது, எஸ்எஃப்ஐயைச் சேர்ந்த மாணவர்கள் செயல்பாட்டு மையத்திற்குள் நுழைந்து, ஜேஎன்யு அதிகாரிகளின் முன் அனுமதியுடன் வைக்கப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் மகா ராணா பிரதாப் ஆகியோரின் உருவப்படங்களைச் சேதப்படுத்தினர்.
இருதரப்பு மாணவர்களும் காயம்:
unknown nodeABVP மாணவர்கள் SFI மாணவர்களின் நடத்தைக்காக அவர்களை எதிர்கொண்டபோது, அந்த நடவடிக்கை மையத்தில் கார்ல் மார்க்ஸ் & லெனின் உருவப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் இருதரப்பு மாணவர்கள் காயமடைந்தனர் என்று இதுதான் கதையின் மறுபக்கம் என பதிவிட்டுள்ளார்.
வாய் திறக்காத முதலமைச்சர்:
unknown nodeமேலும், முதல்வர் முக ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் கொடூரமாக கொல்லப்பட்டது குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்து வருகிறார் எனவும் தெரிவித்துள்ள அண்ணாமலை, ஒரு பொறுப்புள்ள முதலமைச்சராக இருதரப்பு மாணவர்களுக்கும் ஒருவர் அறிவுரை கூற வேண்டும், சித்தாந்த வேறுபாடுகள் உள்ள சூழலில் வாழ கற்றுக்கொள்ளுங்கள், நெருப்பை எரியவிடாதீர்கள் என முதலமைச்சரின் ட்வீட்டிற்கு அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
unknown node