தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை மீனவர்கள் மீது வழக்குப்பதிவு ....!

A case has been registered against Sri Lankan fishermen who attacked Tamil Nadu fishermen.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை சேர்ந்த சிவக்குமார், சிவா மற்றும் சின்னத்தம்பி ஆகிய 3 மீனவர்கள் நேற்று முன் தினம் மதியம் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். நடுகடலில் இரவு 10 மணியளவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை மீனவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகை சுற்றி வளைத்து உள்ளனர்.

பின் மீனவர்களையும் கடுமையாக தாக்கி, மீனவர்களிடம் இருந்த 3 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள 400 கிலோ வலைகளை பறித்துக்கொண்டு தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். இதனையடுத்து படு காயங்களுடன் தப்பிய தமிழக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை மீனவர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.