வேலூர் மாவட்டம் ஊசூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
வேலூர் மாவட்டம் ஊசூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விறகு வெட்டும் கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து நொறுக்கிய நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காலை 9 மணியளவில் கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபரை தேடுபடும் பணியில் போலீசார் ஈடுபட்ட நிலையில், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த கந்தசாமி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், குடிக்க பணம் இல்லாததால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்ததாக போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர்.
