இன்று பிற்பகல் நடைபெறும் குருப் 2 முதன்மை தேர்வு நேரத்தில் மாற்றம் என டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.
குரூப் 2 முதன்மை தேர்வு:
unknown nodeடி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்களில் 51,071 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 32 தேர்வு மையங்களில் 8,315 பேர் தேர்வு உள்ளனர். இந்த சமயத்தில் சென்னை பல தேர்வு மையங்களில் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தேர்வர்களின் பதிவெண்கள் மாறியிருப்பதால் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
கூடுதல் நேரம்:
unknown nodeகாலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியிருக்க வேண்டிய நிலையில் இன்னும் வினாத்தாள் வழங்கப்படவில்லை. குரூப் 2 தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. அதன்படி, அரை மணிநேரதிற்கு பிறகு தொடங்கி தேர்வு நடைபெற்று வருகிறது.
பிற்பகல் தேர்வு நேரம் மாற்றம்:
unknown nodeஇந்த நிலையில், குருப் 2 முதன்மை தேர்வில் பிற்பகலில் நடைபெற இருந்த தேர்வுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு நிலையில், மாற்றம் குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.
குளறுபடி சரியானது:
unknown nodeகாலை தேர்வு தாமதமாக தொடங்கியதால் பிற்பகல் தேர்வு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்களின் பதிவெண் வரிசை, வினாத்தாள் பதிவெண் வரிசையில் வேறுபாடு காரணமாக தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், குளறுபடி சரி செய்யப்பட்டு, அனைத்து இடங்களிலும் தேர்வு நடைபெற்று வருகிறது. பிற்பகல் தேர்வு நேரம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.