தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அரசு அதிகாரிகளே காரணம் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். பல இடங்களில் பொதுமக்கள் மோட்டார் பயன்படுத்தி திருட்டுத்தனமாக குடிநீரை எடுக்கிறார்கள்.இதனை நகராட்சி அதிகாரிகளோ ஊராட்சி செயலாளர்களோ யாரும் கண்டுகொள்வதில்லை என்றும் இதனாலே இவ்வாறான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த தண்ணீர் பஞ்சம் என்பது செயற்கையாக தான் தென் மேற்கு பருவமழை பெய்யும் சூழலில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்று கூறியுள்ளார். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில், அதிகாரிகளின் கவனக்குறைவால் தான் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட அதிகாரிகளே காரணம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !
தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அரசு அதிகாரிகளே காரணம் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். பல இடங்களில்