ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 15 பேருக்கு ஜாமீன் கோரி மனு!

வருமான வரித்துறையினரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதான 15 பேருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை

Madurai High Court

வருமான வரித்துறையினரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதான 15 பேருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை வழங்கியதால் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. இதனால் வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றி பட்டியலிட ஐகோர்ட் கிளை நீதிபதி இளங்கோவன் ஆணையிட்டுள்ளார்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தபோது வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார், உறவினர் வீடுகளில் மே 25-ல் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தது. அப்போது அதிகாரிகளை தாக்கியதாக 15 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, ஜாமீனில் விடுவிக்கக்கோரி, 15 பேரும் கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இந்த நிலையில் கைதான 15 பேருக்கு ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.