மெரினா கடற்கரைக்கு செல்ல 3 நாட்களுக்கு தடை!

Crowds are banned on all beaches, including the marina, on Jan. 15, 16 and 17, as public places are more likely to be crowded.

பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூட வாய்ப்புள்ளது. இதனால், ஜன.15, 16, 17 ஆகிய தேதிகளில் மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் சென்னையில், பொங்கல் தினத்தையொட்டி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வார விடுமுறை விடப்பட்டுள்ளதால், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூட வாய்ப்புள்ளது. இதனால், ஜன.15, 16, 17 ஆகிய தேதிகளில் மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தடை உத்தரவானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.