டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று புதுச்சேரி முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாய அமைப்பினர் 13வது நாளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு பலர் ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாரத் பந்த் என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்திற்கு நாடு முழுவதும் பரவலாக ஆதரவும் கிடைத்துள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு, அவர்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கடைகள், நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் முடப்பட்டுள்ளன.
அந்த வகையில், புதுச்சேரியி அனைத்து தொழிற்சங்கங்கள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும், இன்றைய போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ போன்றவை இயங்கவில்லை.