சென்னையில் சிக்கிய மிகப்பெரிய கள்ளநோட்டு கும்பல்.. காவல் துணை ஆணையர் பரபரப்பு தகவல்கள்...!

சென்னை நுங்கம்பாக்கத்தில் கள்ளநோட்டுகளை கொடுத்து காய்கறி வாங்கிய முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களிடம் இருந்து 45

rs1000

சென்னை நுங்கம்பாக்கத்தில் கள்ளநோட்டுகளை கொடுத்து காய்கறி வாங்கிய முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களிடம் இருந்து 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள், கட்டிங் மெஷின், பணம் எண்ணும் மெஷின் ஆகியவை பறிமுதல். கள்ளநோட்டு கும்பலின் நெட்வொர்க் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள காவல் துணை ஆணையர் சேகர் தேஷ்முக், கைது செய்யப்பட்ட அண்ணாமலை கொடுத்த வாக்குமூலத்தின்படி, சுப்பிரமணியன் என்பவர், அவருக்கும் அடிக்கடி வீட்டில் இருந்து இவ்வாறு பணம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி, அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது 90 பண்டல் ரூ.500 கள்ளநோட்டுகள் இருந்ததது. மேலும், கட்டிங் மெஷின், பணம் எண்ணும் மெஷின் ஆகியவை இருந்தது.

தற்போதைய விசாரணையின் படி, முக்கிய குற்றவாளியான சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 50 லட்சம் வரை பிரிண்ட்  செய்துள்ளனர்.  இதுவரை கிட்டத்தட்ட 5 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். மீதமுள்ள ரூ.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் இதுபோன்ற கள்ளநோட்டுகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களிடம் வரக்கூடிய ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்து பெற வேண்டும். அவ்வாறு கள்ளநோட்டுகள் இருந்தால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.