#BREAKING: பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் வரலாம்- சுகாதாரத்துறை செயலாளர்..!

Arrangements have been made to save 2.5 crore corona vaccine in Tamil Nadu. 2,850 centers are ready to take the drugs to the regional level.

கொரோனா தடுப்பூசி கிடங்கை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 2.5 கோடி கொரோனா தடுப்பூசி சேமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருந்துகளை வட்டார அளவில் கொண்டு செல்வதற்கு 2,850 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

ஹோட்டல் ஊழியர்கள் எட்டாயிரத்திற்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்ததில் 166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு ஐந்து மடங்கு குறைவு. கேரளாவில் பரவக்கூடிய பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய 2,156 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் 24 பேருக்கு குழு உறுதி செய்யப்பட்டது. மேலும் 32 பேரின் சளி மாதிரி முடிவுகள் வர வேண்டி உள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு வந்த மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் இதுவரை 4 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என  தெரிவித்துள்ளார்.