அம்பேத்க‌ருக்கு பாஜகவினர் மரியாதை செலுத்த விசிகவினர் எதிர்ப்பு..!

அம்பேத்கர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவிக்க வந்ததற்கு விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அம்பேத்கர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவிக்க வந்ததற்கு விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

டாக்டர் அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அம்பேத்கருக்கு சிலைக்கு மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் , ம‌துரை அவுட் போஸ்ட் ப‌குதியில் உள்ள‌ அம்பேத்க‌ர் சிலைக்கு மாலை அணிவிக்க‌ வ‌ந்த‌ பாஜகவின‌ரை க‌ண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவிக்க வந்ததற்கு விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட மோதலில் பாஜகவினர் சிலரை விசிகவினர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.