தொகுதி பங்கீடு, 20% தனி இடஒதுக்கீடு – பாமகவுடன், அதிமுக பேச்சுவார்த்தை.!

The AIADMK is in talks with pmk founder Ramdas over constituency sharing. Minister Thangamani and Velumani participated in this.

பாமக நிறுவுனர் ராமதாஸுடன் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவுனர் ராமதாஸுடன் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸை சந்தித்து, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கேட்கும் பாமக கோரிக்கை பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் இல்லத்தில் கடந்த மாதம் 22-ஆம் தேதி அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையிலான குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இரு தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தியது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவது உறுதியாகும் என தெரிகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் வன்னியர் சமுகத்திற்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கவும், இதனை சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.