பாலியல் தொழிலில் விரோதம் பெண்ணை கொன்ற தோழி சிக்கினார்

சின்னமனூர்: திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் சங்கர் (27). இவரது நண்பர் தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த ராஜா (24). இருவரும் அடிக்கடி பாலியல்

unknown node

சின்னமனூர்: திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் சங்கர் (27). இவரது நண்பர் தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த ராஜா (24). இருவரும் அடிக்கடி பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் சென்று வந்துள்ளனர். அப்படி செல்லும் போது உத்தமபாளையம் கோம்பையை சேர்ந்த மகாலெட்சுமியிடம் (47) சங்கருக்கு தொடர்பு ஏற்பட்டது. கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியைச் சேர்ந்த வசந்தி (47) கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் வீடு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். அவரும், மகாலெட்சுமியும் தோழிகள். தொழிலில் இருவருக்கும் சமீபத்தில் விரோதம் ஏற்பட்டது. இதையடுத்து, வசந்தியை கொலை செய்ய சங்கர், ராஜாவை மகாலெட்சுமி அணுகியுள்ளார்.கடந்த 1ம் தேதி கட்டப்பனைக்கு சென்ற மூவரும் வசந்தியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அவர் அணிந்திருந்த 14 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டனர். இதுகுறித்து கட்டப்பனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது கொலையில் பெண் உள்பட மூவருக்கு தொடர்பு இருப்பதும், அவர்கள் சின்னமனூரில் பதுங்கியிருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.காந்திநகர் காலனியில் பதுங்கியிருந்த ராஜா, சங்கர் மற்றும் மகாலட்சுமியை சின்னமனூர் போலீசார் நேற்று கைது செய்து கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொழில் போட்டியால் வசந்தி கொல்லப்பட்டரா அல்லது முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.