தேமுதிக நிரந்தர பொதுச் செயலராக விஜயகாந்த் தேர்வு; துணைப் பொதுச் செயலராகிறார் சுதீஷ்

காரைக்குடி : தேமுதிகவின் நிரந்தரப் பொதுச் செயலராக, கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைப் பொதுச் செயலராக, எல்.கே. சுதீஷ்

unknown node

காரைக்குடி : தேமுதிகவின் நிரந்தரப் பொதுச் செயலராக, கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைப் பொதுச் செயலராக, எல்.கே. சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.காரைக்குடியில் நடைபெறும் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.அதன்படி, தேமுதிக தலைவராக இருக்கும் விஜயகாந்த், பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிகவில் இதுவரை பொதுச் செயலர் பதவி இல்லை. தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கட்சியில் எத்தகைய முடிவு எடுக்கப்பட வேண்டும் என்ற அதிகாரம் விஜயகாந்துக்கு வழங்கப்படுகிறது.மேலும், துணைச் செயலராக விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி, ஏ.ஆர்.இளங்கோவன் உட்பட 4 பேரை நியமித்துள்ளார் விஜயகாந்த்.தேமுதிக அவைத் தலைவராக அழகாபுரம் மோகன்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொருளாளார் பதவிக்கு இளங்கோவை தேர்வு செய்துள்ளார் விஜயகாந்த்.