unknown node
இன்று காலை முதலே ஏராளமானோர் கடைகள், அலுவலகங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தும், அலங்காரம் செய்தும் ஆயுத பூஜை கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். வீடுகளிலும், பனைஒலை தோரணங்கள், வாழை மர கன்றுகளை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆயுத பூஜை பண்டிகையின் போது வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் பொரி, அவல், பழங்கள், பூக்கள், வாழை மரக்கன்றுகள் ஆகியவற்றை விற்பனை நேற்று மாலை முதலே களைகட்டி வருகிறது.ஆயுத பூஜையையொட்டி, தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.