பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாக அமைச்சர் அறிவிப்பு.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவசங்கர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்தார். ஜனவரி 12 முதல் 14 வரை சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை முடிந்த பின் திரும்பி வர ஏதுவாக ஜனவரி 16-ஆம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை 15,619 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாக அமைச்சர் அறிவித்தார்.
சிறப்பு பேருந்துகளில் பயணிக்க இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் என்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 044-24749002, 044-2628445 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.