கொரோனா காலகட்டத்தில் தேர்ச்சி பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று கோரிய மனு தள்ளுபடி.
இந்தியா முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸ் தொற்றினால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாமல் தேர்ச்சி அடைந்தனர்.
இதனால் மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சான்று வழங்குமாறு பொதுநல வழக்கு ஒன்று ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் தேர்வின்றி தேர்ச்சி பெற்ற 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சான்று வழங்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தேர்வுகள் நடத்தாமல் மதிப்பெண் வழங்கும்படி உத்தரவிட முடியாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.