#Breaking : 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு...!

Additional Chief Secretary Prabhakar has issued an action order transferring and promoting 12 IPS officers in Tamil Nadu.

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த 12 பேரில் 3 பேருக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வும், 9 பேருக்கு பணியிட மாற்றமும் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

தீயணைப்புத்துறை  டி.ஜி.பி-யாக கரண் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக ஏ.கே.விஸ்வனாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபி-யாக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாராக வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

குடிமை பொருள் வளங்கள் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபி-யாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி-யாக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபி-யாக சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

unknown node
#Breaking : 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு...!