#BREAKING: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழப்பு.!

Three people were killed in a firecracker factory explosion at Kalaiyarkurichi near Sivakasi.

சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பெண் தொழிலார்கள் உட்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்பகுதி எஸ்பி தெரிவித்துள்ளார்.

இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம் ஆகியுள்ளன. சேதமடைந்த அறைகளில் பட்டாசு தொடர்ந்து வெடித்து சிதறுவதால் தீயை அணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 12ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்ததை அடுத்து, கடந்த சில வாரங்களில் பட்டாசு ஆலையில் நடைபெற்றுள்ள 3வது வெடிவிபத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.