#BREAKING: முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு.!

Actor Vijay has suddenly met Chief Minister Edappadi Palanisamy regarding the master film issue. 100% theatre occupancy.

மாஸ்டர் படம் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீரென சந்தித்துள்ளார்.

திரையரங்குகளில் பார்வையாளர் அனுமதி 50% லிருந்து 100% ஆக அதிகரிக்க முதல்வர் பழனிசாமியிடம் நடிகர் விஜய் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தை பொங்கலுக்காக ஜனவரி 13ல் வெளியிட திட்டமிட்ட நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு மேல் முதல்வர் வீட்டில் விஜய் சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், மாஸ்டர் படம் தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழு சந்திப்பில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.