#Breaking:டிச.13 முதல் 23 ஆம் தேதி வரை அதிமுக உட்கட்சி தேர்தல் – ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு!

Published by
Edison

சென்னை:அதிமுக கிளைக் கழக நிர்வாகிகள்,பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான உட்கட்சி தேர்தல்கள் வரும் டிச.13 முதல் 23 வரை நடைபெறும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

அதிமுகவின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில், கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,அதிமுக உட்கட்சி தேர்தல் 13.12.2021 முதல் 23.12.2021 வரை நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

மேலும்,இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதி – 30, பிரிவு – 2ன்படி “கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும்” என்ற விதிமுறைக்கேற்ப முதல் கட்டமாக, தமிழ் நாட்டில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான கழக அமைப்புத் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக, 13.12.2021 முதல் 23.12.2021 வரை, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கால அட்டவணைப்படி நடைபெற உள்ளன.

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் நாள்:13.12.2021 & 14.12.2021:

  • கன்னியாகுமரி கிழக்கு,கன்னியாகுமரி மேற்கு,தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு,ஈரோடு புறநகர் மேற்கு,சேலம் மாநகர்,சேலம் புறநகர், திருநெல்வேலி,விருதுநகர் கிழக்கு,விருதுநகர் மேற்கு,மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு,நாகப்பட்டினம்,
  • மயிலாடுதுறை,பெரம்பலூர்,அரியலூர்,கரூர்,நீலகிரி,ஈரோடு மாநகர்,ஈரோடு புறநகர் கிழக்கு,நாமக்கல்,விழுப்புரம்,கிருஷ்ணகிரி கிழக்கு,கிருஷ்ணகிரி மேற்கு,திருவண்ணாமலை வடக்கு,திருவண்ணாமலை தெற்கு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் கிழக்கு,திருவள்ளூர் தெற்கு,திருவள்ளூர் வடக்கு,திருவள்ளூர் மத்தியம்,திருவள்ளூர் மேற்கு,செங்கல்பட்டு கிழக்கு,செங்கல்பட்டு மேற்கு.

2-ஆவது கட்டம் தேர்தல் நடைபெறும் நாட்கள் -22.12.2021 & 23.12.2021: 

  • தூத்துக்குடி வடக்கு,தூத்துக்குடி தெற்கு,சிவகங்கை,ராமநாதபுரம்,தேனி, திண்டுக்கல் கிழக்கு,திண்டுக்கல் மேற்கு,திருவாரூர்,புதுக்கோட்டை வடக்கு,புதுக்கோட்டை தெற்கு,தஞ்சாவூர் வடக்கு,தஞ்சாவூர் தெற்கு,திருச்சி புறநகர் தெற்கு,திருச்சி மாநகர்,திருச்சி புறநகர் வடக்கு,கோவை மாநகர்,
  • கோவை புறநகர் வடக்கு,கோவை புறநகர் தெற்கு,திருப்பூர் புறநகர் மேற்கு,தருமபுரி,கள்ளக்குறிச்சி,வேலூர் மாநகர்,திருப்பத்தூர்,வேலூர் புறநகர்,கடலூர் வடக்கு,கடலூர் தெற்கு,கடலூர் கிழக்கு,கடலூர் மேற்கு,ராணிப்பேட்டை,வட சென்னை வடக்கு (கிழக்கு),வட சென்னை வடக்கு (மேற்கு),வட சென்னை தெற்கு (கிழக்கு),வட சென்னை தெற்கு (மேற்கு),சென்னை புறநகர்,தென் சென்னை வடக்கு (கிழக்கு),தென் சென்னை வடக்கு (மேற்கு),திருப்பூர் மாநகர்,தென் சென்னை தெற்கு (கிழக்கு),திருப்பூர் புறநகர் கிழக்கு,தென் சென்னை தெற்கு (மேற்கு).

மேலும்,இப்பொறுப்புகளுக்கான கழக அமைப்புத் தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள், கீழ்க்காணும் விவரப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள விருப்ப மனு விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி, அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தல் :

  • கிளைக் கழகச் செயலாளர் – ரூ.200 கட்டணம்.
  • அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்புப் பிரதிநிதிகள் – கட்டணம் இல்லை.

பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள் தேர்தல் :

  • வார்டு கழகச் செயலாளர் – ரூ.300 கட்டணம்.
  • அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்புப் பிரதிநிதிகள் – ரூ.200 கட்டணம்.

நகர வார்டு கழக நிர்வாகிகள் தேர்தல் :

  • வார்டு கழகச் செயலாளர் – ரூ.500 கட்டணம்
  • செயலாளர்கள், பொருளாளர்,மேலமைப்புப் பிரதிநிதிகள் – ரூ.300 கட்டணம்.

மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் தேர்தல் :

  • வட்டக் கழகச் செயலாளர் – ரூ.2,000 கட்டணம்,
  • அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர்,மேலமைப்புப் பிரதிநிதிகள் – ரூ.700.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான மினிட் புத்தகம், விண்ணப்பப் படிவம், ரசீது புத்தகம், வெற்றிப் படிவம் முதலானவற்றை தேர்தல் நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தலைமைக் கழகத்தில் இருந்து பெற்றுச் சென்று அவற்றை, மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள், தேர்தல் ஆணையாளர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும். மேலும், தேர்தல் நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் முழுமையாக செய்திட வேண்டும்.

மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்தல்களை நடத்தி முடித்து, வெற்றிப் படிவம், ரசீது புத்தகம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் முதலானவற்றை தேர்தல் முடிவுற்ற இரண்டு நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையாளர்களிடம் இருந்து பெற்று அதனை தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மேற்கண்ட அறிவிப்பிற்கிணங்க,கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, முதற்கட்ட கழக அமைப்புத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறும் வகையில் உடன்பிறப்புகள் அனைவரும், தேர்தல் பொறுப்பாளர்களுக்கும், தேர்தல் ஆணையாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதே போல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

5 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

5 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

8 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

8 hours ago