#Breaking : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வுப்பகுதி...!

The deep depression in the Bay of Bengal has strengthened into a depression.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை இன்று இரவு நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு நிலையில் தற்பொழுது காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.