வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் பீகார் அதிகாரிகள் இன்று மாலை ஆலோசனை.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் பீகார் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கின்றனர். பீகாரில் இருந்து இன்று மாலை சென்னை வரும் 4 பேர் கொண்ட ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடடடத உள்ளனர்.
பீகார் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அலோக்குமார், பாலமுருகன் உள்ளிட்டோர் தமிழக அரசுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோரை உயர் அதிகாரிகள் சந்திக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
இவ்வகராம் குறித்து நேற்று பீகார் சட்டசபையில், பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அம்மாநில துணை முதல்வர் இது போலியான தகவல் என்றும் அப்படி ஏதும் இருந்தால் தமிழ்நாடு அரசும் மற்றும் பீகார் அரசும் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்திருந்தார்.