#Breaking : அதிகரிக்கும் கொரோனா ! மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை

மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 3509 பேருக்கு கொரோனா வைரஸ்உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 70,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.நேற்று 2,236 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 39,999பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஆனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த நிலையில் அங்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் வரும் 29ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வரும் 30ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் .
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025