#BREAKING: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..!

Edappadi has written a letter to the modi asking him to take action to release Tamil Nadu fishermen held captive by the Sri Lankan Navy

சமீபத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நெடுந்தீவுக்கும், கச்சத்தீவுக்கும் இடையே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ரோந்துக் கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் 3 படகுகளையும், அதில் இருந்த  மீனவர்களையும் சிறைபிடித்தனர். மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், 36 தமிழக மீனவர்கள் மற்றும் 5 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது கடிதத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.