#BREAKING: தமிழகத்தில் 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

The Tamil Nadu Health Department has announced that the number of corona infections in Tamil Nadu has increased from 29,870 to 30,744 in a single day.

தமிழக்தில் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு 29,870 லிருந்து 30,744 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30,744 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 31,03,410 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 1,55,648 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,744 ஆக உள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் மேலும் 33 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 37,178 ஆக அதிகரித்துள்ளது. இன்று அரசு மருத்துவமனைகளில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்று ஒரேநாளில் 23,372 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை கொரோனாவில் இருந்து 28,71 535 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.94 லட்சகமாக அதிகரித்துள்ளது. இன்று சென்னை – 6,452, கோயம்புத்தூர் – 3,886, செங்கல்பட்டு – 2,377, கன்னியாகுமரி – 1,266,  சேலம் – 1,080, திருவள்ளூர் – 1,069, ஈரோடு – 1,066, திருப்பூர் – 1,014 ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகபட்சமாக கண்டறியப்பட்டுள்ளது.

unknown node