#Breaking : கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்துள்ளது – சுகாதார செயலர்

With the freeze on Sunday, the pace of corona ascent has slowed slightly, the health secretary said.

ஞாயிற்று கிழமை முழுமுடக்கத்தால், கொரோனா ஏற்றத்தின் வேகம் சற்று குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

சென்னை, தண்டையார் பேட்டையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஞாயிற்று கிழமை முழுமுடக்கத்தால், கொரோனா ஏற்றத்தின் வேகம் சற்று குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அடுத்த சில நாட்களுக்கு மக்கள் வெளியே வர வேண்டாம். மாஸ்க் போடாமல் வெளியே வராதீர்கள். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்து கொண்டால் கொரோனா முழுமையாக குறைந்துவிடும்.

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா குறைவாக இருப்பதாக நினைத்துக் கொண்டு மக்கள் வெளியே வரக் கூடாது. வீட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர் இருந்தால், மாஸ்க் அணிய வேண்டும். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏப்ரல்-1ம் தேதி முதல், தடுப்பூசி வீணாவதை 5% ஆக குறைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.