தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஏற்கனவே 6 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபர் ஸ்பெயினில் இருந்து வந்தவர். இவரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிக்சை அளித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
unknown nodeஇதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் 5 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.