BREAKING:தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி.!

தமிழகத்தில் இன்று காலை வரை கொரோனா வைரஸால் 15 பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று காலை வரை கொரோனா வைரஸால் 15 பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.

unknown node

இவர்களில்  நியூசிலாந்தில் இருந்து வந்த 55 வயது பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் , நியூசிலாந்தில் இருந்து வந்த 65 வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

லண்டனில் இருந்து வந்த 25 வயது இளைஞர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.