#Breaking: தமிழகத்தில் இரண்டாவது நபரை தாக்கிய கொரோனா வைரஸ்.!

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். டெல்லியிலிருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். டெல்லியிலிருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்குமுன் தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

unknown node

பாதிக்கப்பட்டவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா தாக்குதல் குறைவாகத்தான் இருக்கு என்று அமைச்சர் தெரிவித்தார். மேலும் பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் தேவையற்ற பயணங்கள், பொது இடங்களில் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.