#BREAKING: சீர்காழியில் இரட்டை கொலை..! ஒருவர் என்கவுன்டர்..!

It has been reported that one of the 3 was attacked by the police and encountered by the police while trying to escape.

பூம்புகார் அருகே தருமகுளத்தில் தன்ராஜ் என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார். இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. தன்ராஜ் இவரது மனைவி ஆஷா (45), மகன் அகில் (24), மருமகள் பெயர் நிக்கில் ஆகியோர் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை தன்ராஜ் வீட்டில் காலை 6 மணி அளவில் வட மாநிலத்தை சார்ந்த 4 பேர் வீட்டில் உள்ளே சென்று வீட்டில் இருந்த 15 கிலோ தங்கம் நகையை கொள்ளையடித்து தன்ராஜ் மனைவி ஆஷா, அவரது மகன் அகில் (25) ஆகிய இருவரையும் கழுத்தறுத்து கொன்று விட்டு நகைகளுடன் வீட்டில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும், தன்ராஜின் காரையும் திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.

மேலும், அடகு கடை உரிமையாளர் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் ஆகியோரை கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அந்த வடமாநில கொள்ளையர்கள் அருகில் இருந்த கிராமத்தில் காரை நிறுத்தி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீசார் அங்கு தேடிவந்த நிலையில், கார் நின்ற கிராமத்தில் இருந்து அருகில் உள்ள கிராமத்தில் வடமாநில கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த 3 வடமாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடன் இருந்த 2 நகை பைகளில் ஒரு பையை வயலில் வீசியதால் அதை எடுக்க சென்றபோது, 3 பேரில் ஒருவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது போலீசார் என்கவுன்டர் செய்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.