#BREAKING: தேர்தல் கூட்டணி – கமலுக்கு அதிகாரம் – பொதுக்குழுவில் தீர்மானம்.!

The General Committee has authorized President Kamal Haasan to take any decision related to the party.

கட்சி தொடர்பான எந்த முடிவையும் எடுக்க தலைவர் கமல்ஹாசனுக்கு பொதுக்குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைவா் கமல்ஹாசன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்ப்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா்.

இந்நிலையில், தேர்தல் கூட்டணி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கமல்ஹாசனுக்கு வழங்கி, மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி தொடர்பான தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட அனைத்து முடிவையும் எடுக்க தலைவர் கமல்ஹாசனுக்கு பொதுக்குழு அங்கீகாரம் அளித்துள்ளது.