#BREAKING: சட்டமன்ற தேர்தல் – சென்னை வந்த இந்திய தேர்தல் ஆணையர் குழு.!

The Election Commission of India is scheduled to hold consultations today and tomorrow on the preparations for the Tamil Nadu Assembly elections.

தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இன்றும், நாளையும் இந்திய தேர்தல் ஆணைய குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு இன்று தமிழகம் வர உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட 8 அதிகாரிகள் சென்னை வந்தடைந்தனர். அரோராவுடன் சுஷில் சந்திரா, உமேஷ் சின்ஹா, ராஜிவ் குமார் உள்ளிட்ட 8 அதிகாரிகள் வந்துள்ளன. மதியம் 12 மணிக்கு அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்களுடன் தேர்தல் ஆணைய குழு தனித்தனியே ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

இதையடுத்து நாளை தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர் உள்ளிட்டோருடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். பின்னர் இந்திய தேர்தல் ஆணைய குழு புதுச்சேரி சென்று தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளது. இதனைத்தொடர்ந்து கேரள மாநில செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.