தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், அனைத்து கட்சிகளும் தொகுதி மற்றும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து, பாதிப்பு நாள் ஒன்றுக்கு ஆயிரத்தை நெருங்குகிறது.
இதனை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அனைவரும் மாஸ்க் மற்றும் பொது சுகாதாரத்துவதை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதுவும் தேர்தல் நேரத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பெரிய சவாலாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் பீகார் மாநில சுகாதார அதிகாரிகள் சுதிர்குமார், ரோகிணி ஆகிய இருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரில் கொரோனாவுக்கு மத்தியில் தேர்தல் நடத்தியது எவ்வாறு என்று அம்மாநில அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரும் சூழலில், இந்த இரண்டு அதிகாரிகளை தலைமை அதிகாரி நியமித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…