#Breaking : ஜெயலலிதா நினைவிடத்தில் கருப்பு சட்டை அணிந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை!

On the occasion of the 4th Remembrance Day of Ms. Jayalalithaa, EPS, OBS honored by wearing a black shirt at her memorial at Marina Beach.

செல்வி ஜெயலலிதாவின் 4-வது நினைவு தினத்தையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கருப்பு சட்டை அணிந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை.

அதிமுகவின் பொதுச் செயலாளராக 6-வது முறை முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, உலகைவிட்டு மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அங்கு தற்போது பிரமாண்டமான நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காவது நினைவு தினத்தை அடுத்து, அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அவரது நினைவிடத்தில் வைத்து, உறுதி மொழியும் ஏற்றுக் கொண்டனர். துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் உறுதிமொழியை வாசிக்க, முதல்வர்  அதிமுக நிர்வாகிகள் அத்தானை ஏற்றுக் கொண்டனர்.