சென்னை : தமிழகத்தில் நிலவும் வானிலை மாற்றங்கள் மற்றும் அடுத்த சில தினங்களுக்கான மழை நிலவரம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, மாவட்ட வாரியாகப் பெய்யக்கூடிய மழை விவரங்கள் குறித்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இன்று (10-08-2026): மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (11-08-2026): மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழகப் பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம்.
ஆகஸ்ட் 12 மற்றும் 13: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 14: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒட்டுமொத்த தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், இன்று (10-08-2026) மற்றும் நாளை (11-08-2026): சென்னையில் வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
