#BREAKING: இபிஎஸ் அணியில் இணைந்த ஓபிஎஸ் அணி நிர்வாகிகள்.. இன்னும் 106 பேர் ரெடி!.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் விலகி  எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் விலகி  எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர்.

சூடு பிடித்துள்ள இடைத்தேர்தல்:

unknown node

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களத்து வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் அதிமுகவில் இபிஎஸ் அணி சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

போட்டிபோட்டு பிரச்சாரம்:

unknown node

மறுப்பக்கம் திமுருக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைச்சர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தலில் 4 முனை போட்டி இருந்தாலும், அதிமுக, திமுக (காங்கிரஸ்) இடையே தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் அணி, திரும்ப வாபஸ் பெற்றிருந்தது.

இபிஎஸ் அணிக்கு தாவிய ஓபிஎஸ் நிர்வாகிகள்:

unknown node

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் விலகி  எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். அதன்படி, ஓபிஎஸ் அணியில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த முருகானந்தம், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் தங்கராக் பழனிசாமி ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளனர். சேலத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இணைந்தனர்.

ஓபிஎஸ்-யின் 106 நிர்வாகிகள்:

unknown node

மேலும், ஓபிஎஸ் அணியின் ஈரோடு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் முருகன், வர்த்தக அணி செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோரும் அணி மாறினர். ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அனைவரும் விரைவில் பழனிசாமி அணிக்கு வருவார்கள் என அணி மாறியவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தின் 106 நிர்வாகிகள் பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாற உள்ளதாகவும் முருகானந்தம் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.