#BREAKING: பிப்.20ம் தேதி ஆலோசனை கூட்டம்! – ஓபிஎஸ் அறிவிப்பு

தனது ஆதரவாளர்களுடன் பிப்ரவரி 20-ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனது ஆதரவாளர்களுடன் பிப்ரவரி 20-ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனது தரப்பு அதிமுகவில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் பிப்ரவரி 20ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். எழும்பூரில் வரும் 20-ஆம் தேதி மாலை 4 மணிக்கு  பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய ஆலோசனை கூட்டத்துக்கு தனது ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு கொடுத்துள்ளது முக்கியவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

unknown node