#Breaking: 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம்- முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்..!

#Breaking: Free electricity connection for farmers - Chief Minister Stalin starts tomorrow ..!

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 1 லட்சம்விவசாயிகளுக்குவிரைவில்இலவசமின்இணைப்பு வழங்கப்படும் என்றும்,அதன்படி,தமிழகத்தில் 4.52 லட்சம் விவசாயிகள் புதியமின்இணைப்புக்காக விண்ணப்பித்துள்ளனர் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.

அதன்படி,முதற்கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு  புதிய மின் இணைப்புகள் வழங்குவதற்கான ஆணைகளை முதல்வர் நாளை காலை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.