#BREAKING: பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆளுநர் மளிகை முற்றுகை..!

support of the farmers the All India Federation of Farmers led by BR Pandian is leading a siege protest towards the Governor's House.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 23-வது நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு பல அரசியல் தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர்  பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி  முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம்நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.