#BREAKING: ஜெ.இல்லம்- மேல்முறையீடு செய்ய அதிமுகவிற்கு அனுமதி..!

Published by
murugan

ஜெயலலிதா இல்லத்தை அரசு கையகப்படுத்தது செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டில் வசித்து வந்தார். இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற உள்ளதாக 2017 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். பின்னர், அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமை ஆக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

ஆனால், இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கடந்த நவம்பர்24 ஆம் தேதி தீர்ப்பு  வெளியாகியது. அதன்படி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது எனவும், மூன்று வாரத்தில் வேதா நிலையம் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பின்னர், போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய நினைவு இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் தீபா,தீபக் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து, வேதா நிலைய நினைவு இல்லத்தின் சாவியை கடந்த 10-ஆம் தேதி ஆட்சியர் விஜயா ராணி தீபா, தீபக்கிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், ஜெயலலிதா இல்லத்தை அரசு கையகப்படுத்தது செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சமீபத்தில் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கப்பட்டதை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான சி.வி.சண்முகம் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கப்பட்டதை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாநில அரசு அக்கறை காட்டாததால், அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல்முறையீடு செய்வதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் நினைவு இல்லத்தை வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்குவது அரசு மற்றும் மக்கள் பணத்தை வீணடிக்கும் செயல் என்ற தனி நீதிபதியின் கருத்து அதிமுக தொண்டர்களின் மனதை புண்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி வேதா இல்ல சாவியை வாரிசுகளிடம் ஒப்படைத்து விட்டால் அதிமுக பெரும் இழப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

13 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago