#BREAKING: ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ் – முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

Chief Minister Palanisamy has announced that the cases registered by the police during the Jallikattu protest will be withdrawn.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறை பதிவு செய்த வழக்குகள் திரும்ப பெறப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். விரும்பத்தகாத நிகழ்வுகளான காவலர்களை தாக்கியது தொடர்பான வழக்குகளை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் திரும்பபெறப்படும் என்று தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையின் போது முதல்வர் பழனிசாமி இதனை அறிவித்துள்ளார்.

இதனிடையே, நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கம், ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெப்பதற்காக பல்வேறு பகுதிகளில் போரட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பொதுமக்கள் மீது வழக்குகள் போடப்பட்டு நிலுவையில் உள்ளது. ஆதலால், வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.