#BREAKING: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு! – சிபிசிஐடி

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை முடிவடைந்ததாக சிபிசிஐடி தரப்பில் பதில்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை முடிவடைந்ததாக சிபிசிஐடி தரப்பில் பதில்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு பெற்றதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு விசாரணையின்போது, விசாரணை நிறைவு பெற்றதாகவும், 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யபடும் எனவும் சிபிசிஐடி தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிபிசிஐடி தரப்பு கூறுகையில் , மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது; அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளது. சிபிசிஐடி தரப்பில் அளித்த பதிலை தொடர்ந்து  மாணவி மரணம் குறித்து விசாரணையை முறையாக நடத்தக்கோரி தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்துவைக்கப்பட்டது.