#Breaking:தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

#Breaking: Leave for schools in Thoothukudi district today!

தூத்துக்குடி:கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதனால்,பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது வரை 4 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை:

விருதுநகர்,

மதுரை.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:

அதைப்போல,கனமழை காரணமாக நாமக்கல்,தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.