#Breaking : தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வழக்கு ! பிப்ரவரி 1ம் தேதி தீர்ப்பு

Published by
Venu
  • சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில்  7ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிப்ரவரி 1 ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில்  7ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த 2018  ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை  தொடர்ந்து 6 மாதங்கள் இவர்கள் ஒருவர் பின் ஒருவராக அந்த சிறுமியை வன்கொடுமை செய்தது  தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இது தொடர்பாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 11 பேரையும் கைது செய்தது போலீசார்.சிறுமியின் தாய் அளித்த புகாரில் போக்ஸோ, கொலை முயற்சி, கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின்னர் இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கைதானவர்களில் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாபு என்பவர் மரணமடைந்தார்.இந்நிலையில் இது தொடர்பாக சென்னை சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு மீதான விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில்,பிப்ரவரி 1-ஆம் தேதி நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.மரணமடைந்த ஒருவரை தவிர மீதமுள்ள 16 பேர் மீது தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Published by
Venu

Recent Posts

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

16 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago