திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி நிஜாமுதீனை சென்னையில் கைது.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி நிஜாமுதீனை சென்னையில் கைது செய்தது காவல்துறை. திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்.12-ஆம் தேதி திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் மையங்களில் ரூ.72 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது முக்கிய குற்றவாளியை காவல்துறை கைது செய்துள்ளது.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஹரியானவை சேர்ந்த ஆரிப், ஆசாத் மற்றும் பாஷா, அப்சர் ஆகியோர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுளள்ளனர். பிப்.12 தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து, ரூ.73 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதில், கொள்ளையர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய பணம் எங்கே பதுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறியும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.