#BREAKING: கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை.!

Chief Minister Edappadi Palanisamy has announced that New Year celebrations will not be allowed on beaches and roads.

கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பில், அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்றும் டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரையில் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், தாங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உணவகம் மட்டும் வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாடத்தால் மக்கள் அதிகளவில் கூடினால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. நோய் தொற்று தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் நடவடிக்கை என்றும் சில வெளிநாடுகளில் கொரோனா தொற்று தற்போது மீண்டும் பரவி வரும் சூழலில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

unknown node