BREAKING NEWS :வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்

பராமரிப்பு பணிகளை ஆய்வுசெய்ய குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்

பராமரிப்பு பணிகளை ஆய்வுசெய்ய குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது தமிழக அரசு.

unknown node

அதேபோல் உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்தது உச்சநீதிமன்றம்.அதில்  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கைகையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.மேலும் உயர்நீதிமன்றத்தை நாட வலியுறுத்தியது உச்சநீதிமன்றம் .

பின்னர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை  நிர்வாகம் மனுதாக்கல் செய்தது.இந்த மனுவில் ஆலை பராமரிப்பு பணிக்காக திறக்க உத்தரவிடகோரி கோரிக்கை விடுத்தது.

இன்று  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பராமரிப்பு பணிகளை ஆய்வுசெய்ய குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.பின்னர் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையை ஜூன் 11-க்கு ஒத்திவைத்து சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.