BREAKING: மே 3 வரை ஊரடங்கில் எந்த தளர்வு இல்லை- தமிழக அரசு அதிரடி .!

மே 3 வரை ஊரடங்கில் எந்த தளர்வு இல்லை என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

மே 3 வரை ஊரடங்கில் எந்த தளர்வு இல்லை என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் குறைந்ததால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு செல்கிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17265 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கை  நீட்டித்துள்ளது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அந்த தளர்வுகள் இன்று முதல் அமல்ப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், இன்று முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் ஊரடங்கு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

unknown node

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில், மே 3 வரை ஊரடங்கில் எந்த தளர்வு இல்லை என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன் கொரோனாவின் தீவிரம் குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அமுல்படுத்தப்போவதில்லை என பஞ்சாப், கர்நாடக அரசு முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.