#Breaking: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் – தமிழக அரசு அறிவிப்பு

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 9ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தொழில் நிறுவனங்கள், வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் தேவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் பங்கேற்றுயிருந்தனர்.
இந்த நிலையில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, ஆட்டோ ரிக்ஷ மற்றும் டாக்சிக்கு சாலை வரி கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிட்கோ நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய மனைவிலை, தவணை, வாடகை செலுத்த 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள், சுயதொழில் செய்பவர்கள் வங்கிக்கடன் பெறும்போது செலுத்த வேண்டிய முத்திரைத்தாள் பதிவுக்கட்டணம் செலுத்துவதில் டிசம்பர் 21 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த நிதியாண்டியில் முதலீட்டு மானியம் வழங்க ரூ.280 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 60% தொகையாக ரூ.168 கோடி உடனடியாக நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள தகுதியான அனைத்து நிறுவனங்களுக்கும் மானியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர்கள் இஎம்ஐ கட்டுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு வழங்க வலியுறுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று, மே மாதத்தில் காலாவதியாகும் ஆட்டோ, கால்டாக்சி வாகனங்களுக்கான காப்பீடு செலுத்த கால நீட்டிப்பு வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் பெரிய, சிறிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தொழில் வரிக்கு மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் – தமிழக அரசு அறிவிப்பு#TNGovt #CMMKStalin pic.twitter.com/sK5Y1OAJAv
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 11, 2021